அம்பானி மருமகளுக்காக சென்னையில் தயாராகும் பல லட்சங்கள் மதிப்பு முகூர்த்த புடவை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தா என்பவரை வரும் டிசம்பரில் திருமணம் செய்ய போகிறார் என்பது தெரிந்ததே. இந்தியாவே அசந்து போகும் அளவிற்கு நடைபெறவுள்ள இந்த திருமணத்தின் ஆரம்பகட்ட பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மணமகள் ஸ்லோகோ மேத்தாவின் முகூர்த்த புடவை குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது.
மணமகள் ஸ்லோகோ மேத்தாவின் முகூர்த்த புடவை முழுக்க முழுக்க சுத்தமான தங்கம் மற்றும் நவரத்தின தங்கத்தால் ஆன எம்பிராய்டரில் தயாராகி வருவதாகவும், இந்த சேலைக்காக கடந்த ஒரு வருடமாக 36 நெசவாளர்கள் மிகவும் நுணுக்கமாக நெய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னையில் தயாராகி வரும் இந்த சேலையின் மொத்த எடை சுமார் 8 கிலோ என்றும், இந்த சேலைக்கக மேட்ச்சாக ஜொலிக்கும் வைரங்கள் பதித்த ஜாக்கெட் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த முகூர்த்த சேலையின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல். முகூர்த்த புடவையின் மதிப்பே ரூ.50 லட்சம் எனில் இன்னும் திருமணத்தில் என்னென்ன பிரமாண்டங்கள் இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com