கொரோனாவால் சீரழிந்த கூட்டுக்குடும்பம்!!! 18 பேர் பாதிப்பு மற்றும் தொடரும் அவலம்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 22 2020]

 

மகாராஷ்டிர மாநிலம் பூனே அடுத்த பிரிம்பிஹான் என்ற பகுதியில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. இப்பகுதியில் 3 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அந்த 3 சகோதரர்களுக்கும் மனைவி, மகன், மகள் என ஒட்டுமொத்தமாக அக்குடும்பத்தில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். முதன் முதலாக அக்குடும்பத்தில் உள்ள ஒரு வாலிபருக்கு ஜுலை 5 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. அதையடுத்து அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டபோது அனைவருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது.

பூனே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்போது அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர நோய் பாதித்த 9 நாட்களுக்குள் அக்குடும்பத்தின் தலைவர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நோய் பாதித்த உடனே அனைவரும் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். ஆனாலும் நோயின் தீவிரத் தன்மையால் முதலில் கடைசி தம்பி திலீப்ராப் கல்ப்பீயூர் (61) ஜுலை 10 ஆம் தேதி உயிரிழந்து உள்ளார். அடுத்து இரண்டாவது தம்பி டைனேஸ்வர் கல்ப்பீயூர் (63) ஜுலை 15 ஆம் தேதி உயிரிழந்தார். அடுத்து குடும்பத்தின் முதல் சகோதரரர் போபட்ராவ் கல்ப்பீயூர் (66) ஜுலை 18 ஆம் தேதி உயிரிழந்து உள்ளார்.

குடும்பத்தின் 3 சகோதரர்களும் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்து உள்ளனர். தற்போது மற்றவர்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர். என்றாலும் குடும்பத் தலைவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சோகம் அவர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது 12 லட்சத்தை நெருக்க இருக்கும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கும் சமயத்தில் ஒரே குடும்பத்தில் 18 பேருக்கு பாதிப்பு அதில் 3 பேர் உயிரிழப்பு என்ற செய்தி நாட்டையே உலுக்கும் விதத்தில் அமைந்திருப்பதைக் குறித்து அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

More News

கந்தனுக்கு அரோகரோ: கந்தசஷ்டி விவகாரத்திற்கு குரல் கொடுத்த ரஜினி

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கள்ளப்புருஷனை விட்டுத்தராத 2வது மனைவி: கத்தியால் குத்திய கணவர்

சென்னையை சேர்ந்த ஒருவரின் இரண்டாவது மனைவி தனது கள்ள புருஷனை விட்டுத்தர முடியாது என பிடிவாதமாக இருந்ததால் அவரது கணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வேலையை பாருங்கள்: கவிஞர் வைரமுத்துவின் ஆவேச விட்டால் பரபரப்பு 

கவியரசர் கவியரசு வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா??? 

அமெரிக்கா தன் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புக்களை தனது மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி H-1B விசாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: மொத்தம் 17 எம்.எல்.ஏக்களுக்கு பாதிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு