வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்...! கண்கலங்க வைக்கும் காணொளி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
வடமாநிலங்களில் சடலங்கள் வரிசையாக எரியூட்டுவதற்காக வைத்திருக்கும் காணொளி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் கொடுமையாக இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவால் தினசரி உயிரிழப்பு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இறப்பது போன்ற மரண ஓலங்கள் காதுகளில் விழுந்தவண்ணம் உள்ளது.
இந்தியாவில், வடமாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த காணொளி தான் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இறப்பு என்பது மனிதனுக்கு இந்த அளவிற்கு கொடுமையாக இருக்குமா என்று எண்ணுமளவில் இந்த காணொளி உள்ளது.
யாருக்கும் சாவு இவ்வளவு கொடுமையா இருக்க கூடாது??? pic.twitter.com/d3YxDw3pQm
— Niranjan kumar (@niranjan2428) April 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com