கல்லூரி மாணவிக்கு காதல் வலை: கொரோனா தடுப்பு அதிகாரி மீது புகார்
- IndiaGlitz, [Wednesday,July 08 2020]
சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாநகராட்சி ஊழியர் ஒருவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னார்வலராக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பொதுமக்களின் வெப்பநிலையை அறிந்து மாநகராட்சிக்கு தகவல் அளித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் கமலகண்ணன் என்பவர் அந்த கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசியதாக தெரிகிறது
தான் மாநகராட்சியில் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும் தனக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வருவதாகவும் தன்னைத் திருமணம் செய்து கொண்டால் சந்தோசமாக வாழலாம் என்றும் அந்த கல்லூரி மாணவிக்கு ஆசை வார்த்தை காட்டி அந்த கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்துள்ளார். ஆனால் அந்த காதல் வ்லையில் சிக்காத கல்லூரி மாணவி, கமலக்கண்ணன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து கமல கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயாராகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது