'காலா'வை குறிவைத்து காய் நகர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
- IndiaGlitz, [Friday,April 06 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது. கோலிவுட் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தமிழக அரசின் பேச்சுவார்த்தை முயற்சியால் முடிவுக்கு வந்தால் திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஸ்டிரைக் முடிந்தபின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் உறுதியில்லை என்பதால் இந்த படத்தின் வியாபாரமும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் காலாவை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.
ஆம், காலா ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களை ஒளிபரப்ப இப்பவே டிஜிட்டல் நிறுவனங்களை நோக்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் படையெடுக்க தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விளம்பரங்களின் வியாபாரம் கோடிக்கணக்கில் நடைபெற்று வருவதாகவும், திரையரங்குகளில் வசூலிக்கப்படும் தொகையை விட இந்த விளம்பர வசூல் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் படம் என்பதால் முதல் ஒருவாரத்திற்கு கண்டிப்பாக கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் தங்கள் நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்ற நோக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கருதுகின்றன.