மொபைல் போன், கம்யூட்டர்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால் 200க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் மருத்துவர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமன்றி மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கும் கொரோனா என்ற பெயரில் வைரஸ் தாக்கி வரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் ஏராளமானோர் இந்த வைரஸ் குறித்து பல தகவல்களை கூகுளில் தேடி வருகின்றனர். ஆனால் கூகுளில் கொரோனா வைரஸ் பெயரில் ஏராளமான போலி ஃபைல்கள் உலாவி வருவதாகவும் இந்த பைல்களை ஓபன் செய்தால் அதில் இருக்கும் வைரஸ்கள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு பரவி விடும் என்றும் எனவே இத்தகைய போலி வைரஸ்கள் கொண்ட பைல்களை ஓபன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆன்டிவைரஸ் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது அதே பெயரில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கும் வைரஸ் மூலம் பரவி வருவது குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout