பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு கொரோனா பாதிப்பா?
- IndiaGlitz, [Monday,February 03 2020]
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசுக்கு சீனாவில் 300 பேர் பலியாகி விட்டதாகவும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி விட்டதாகவும் இதனை தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கும் மருத்துவர்கள் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான போண்டாமணி மருத்துவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது . இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள போண்டாமணி, தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வெளிவந்துள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.