கொரோனாவே இன்னும் போகல... அதுக்குள்ள இன்னொரு பெருந்தொற்றா??? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

 

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது. கொரோனா வைரஸின் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சீனாவில் பன்றிகளிடையே மற்றொரு வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பன்றிகளிடையே காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ் கிருமி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது எனவும் விஞ்ஞானிகள் தெளிவு படுத்து கின்றனர்.

G4 EA H1N1 என அழைக்கப்படும் இந்த புதிய வைரஸ் காய்ச்சல் தற்போது வரை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் எதிர் காலத்தில் கொரோனாவைப் போன்று பெரிய அச்சுறுத்தலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த வைரஸ் காய்ச்சலை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். மனிதர்களிடம் புதிய வைரஸ் காய்ச்சல் பரவினால அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரு புதிய வகை வைரஸ் பரவும் போது அதைப் பற்றிய அறிவை மனித உடலில் உள்ள செல்கள் தெரிந்து வைத்திருக்காது. இதனால் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் குணத்தை மனித செல்கள் பெற்றிருக்காது.

பன்றிகளிடம் பரவி வரும் புதிய வைரஸ் இதுவரை மனிதர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவு படுத்துகின்றனர். ஒருவேளை மனிதர்களிடம் பரவும் போது அதை எதிர்த்து போராட முடியாமல் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டுகின்றனர். தற்போது வரை பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும் வித்தியாசமான வைரஸ் காய்ச்சல் பெரிய ஆபத்து கொண்டது என சீன விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.