கொரோனா வந்தால் உதவ, ஏழை நாடுகளுக்கு ரூ.90,000 கோடியை ஒதுக்கியுள்ளது உலக வங்கி..!
- IndiaGlitz, [Wednesday,March 04 2020]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவதற்கு ஏழை நாடுகளுக்கு ரூ.90,00 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசுக்கு இதுவைரை உலகம் முழுவதும் 92,312 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,131 பேர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். கட்டுப்படுத்த முடியாமல் திணற செய்து கொண்டிருக்கும் இந்த வைரஸிற்கு உலக பெரும் நாடுகளே பல பெரும் முயற்சிகள் எடுத்து நோய் பரவாமல் தடுக்க முயன்று வருகின்றன.
இந்நிலையில் ஏழை நாடுகளிலும் இந்த வைரசை சமாளிக்க அவர்களுக்கு உதவும் விதத்தில் உலக வங்கியானது 90,00 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மேலும் சுகாதார, மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்து தருவதாக உறுதி கொடுத்துள்ளது.