கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா??? WHO என்ன சொல்கிறது!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்று WHO அறிவுரை கூறியிருக்கிறது. முன்னதாக தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவுமா என்பதைக் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அதில் தாயின் சுவாச உறுப்புகளோடு நேரடியான தொடர்பு ஏற்படாத வரை குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்பட்டு இருந்தது. மும்பை நகரில் 100 க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுத்த தகவலையும் செய்திகளில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போது முகமூடிகளை அணிந்து கொண்டு தாய்ப்பாலை கொடுக்க வலியுறுத்தப் படுகின்றனர். தாய்ப்பாலில் கொரோனா நோய்த்தொற்று இருக்காது எனவும் தாய்ப்பால் குழந்தைகளை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்டது எனவும் பல ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருந்தனர். தற்போது உலகச் சுகாதார நிறுவனமும் அதை வலியுறுத்தி இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், அவர்களின் குழந்தைகக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த வேண்டும். அந்தப் பெண் மோசமாக பாதிக்கப் படாதவரை, தாயைம் குழந்தையையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுக்கும்போது முக கவசம் அணிய வேண்டும்” என உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout