கொரோனாவின் அடுத்த அவதாரம்… புது வேரியண்ட் பரவுவதாக WHO எச்சரிக்கை!
- IndiaGlitz, [Saturday,October 23 2021]
டெல்டா வகை கொரோனா வைரஸின் மாறுபாடு கொண்ட AY 4.2 எனும் புதிய வேரியண்ட் தற்போது பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவி வருவாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்நிலையில் வேரியண்ட் வைரஸ்களான ஆல்பா, பீட்டா, டெல்டா என்று அடுத்தடுத்த மாறுபாடு கொண்ட வைரஸ்கள், பாதிப்பு மற்றும் பரவல் தன்மையில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதிலும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடு கொண்ட டெல்டா வகை வைரஸ்களைப் பார்த்து உலக நாடுகளே பயந்தன.
அந்த டெல்டா வகை வைரஸ்களில் இருந்து தற்போது புதிய மாறுபாடு கொண்ட AY 4.2 எனும் வைரஸ் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பரவி வருவதாக WHO அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த வேரியண்ட் அதிகமாகப் பரவக்கூடியது என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் WHO தெளிவுப்படுத்தி இருக்கிறது. இதனால் ஆல்பா மற்றும் டெல்டா போன்று புதிய AY 4.2 அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர்.