கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெண்களுக்கு தாடி வளருமா??? சர்ச்சை விளக்கம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒருவேளை ஆண்களுக்கு பெண் தன்மை வரலாம். ஏன் சில பெண்களுக்கு தாடி மீசை கூட வளரலாம் எனும் சர்ச்சை கருத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானரோ தெரிவித்து இருக்கிறார். ஆனால் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சானரோ கொரோனாவின் ஆரம்பக் கட்டத்திலேயே இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல்தான் எனக் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
மேலும் மற்ற நாடுகள் எல்லாம் கொரோனா பரவலுக்கு பயந்து ஊரடங்கை பிறப்பித்தபோது அதற்கும் அந்நாட்டின் அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு கடந்த ஜுலை மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்த அவர், நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மாட்டேன். பிரேசில் நாட்டு மக்களுக்கும் அது தேவையில்லை எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அதாவது, “இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று பைஃசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த தடுப்பூசியால் நீங்கள் தனித்துவ மனிதராக மாறினால் ஒரு பெண்ணுக்கு தாடி வளரத் தொடங்கினால் அல்லது ஒரு ஆண் ஒரு பெண் குரலில் பேச ஆரம்பித்தால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சனை. இது பெரும் பின்விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.
பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் 186,773 ஆக அதிகரித்து உள்ள நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசியை வாங்குவதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பைஃசர் மற்றும் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாகவும் இதற்காக 3.9 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில்தான் கொரோனா தடுப்பூசி அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்றும் ஆனால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அதோடு தடுப்பூசியால் வரும் பக்க விளைவுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறி இருக்கிறார். இதனால் அந்நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா? வேண்டாமா? எனும் படு சந்தேகத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com