கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெண்களுக்கு தாடி வளருமா??? சர்ச்சை விளக்கம்!!!

  • IndiaGlitz, [Monday,December 21 2020]


 

கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் ஒருவேளை ஆண்களுக்கு பெண் தன்மை வரலாம். ஏன் சில பெண்களுக்கு தாடி மீசை கூட வளரலாம் எனும் சர்ச்சை கருத்தை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானரோ தெரிவித்து இருக்கிறார். ஆனால் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சானரோ கொரோனாவின் ஆரம்பக் கட்டத்திலேயே இதுவும் ஒரு சாதாரண காய்ச்சல்தான் எனக் கருத்துத் தெரிவித்து இருந்தார்.

மேலும் மற்ற நாடுகள் எல்லாம் கொரோனா பரவலுக்கு பயந்து ஊரடங்கை பிறப்பித்தபோது அதற்கும் அந்நாட்டின் அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு கடந்த ஜுலை மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்த அவர், நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மாட்டேன். பிரேசில் நாட்டு மக்களுக்கும் அது தேவையில்லை எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார். சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அதாவது, “இந்தத் தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல என்று பைஃசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த தடுப்பூசியால் நீங்கள் தனித்துவ மனிதராக மாறினால் ஒரு பெண்ணுக்கு தாடி வளரத் தொடங்கினால் அல்லது ஒரு ஆண் ஒரு பெண் குரலில் பேச ஆரம்பித்தால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சனை. இது பெரும் பின்விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.

பிரேசிலில் கொரோனா உயிரிழப்புகள் 186,773 ஆக அதிகரித்து உள்ள நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசியை வாங்குவதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்காக பைஃசர் மற்றும் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாகவும் இதற்காக 3.9 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில்தான் கொரோனா தடுப்பூசி அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது என்றும் ஆனால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அதோடு தடுப்பூசியால் வரும் பக்க விளைவுகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறி இருக்கிறார். இதனால் அந்நாட்டு மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா? வேண்டாமா? எனும் படு சந்தேகத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

இன்ஸ்டாகிராமில் வேற லெவல் பண்ணும் அஜித்-விஜய் பட நடிகை!

அஜித் நடித்த 'வரலாறு', விஜய் நடித்த 'திருமலை' விக்ரம் நடித்த 'ஜெமினி' கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', பிரசாந்த் நடித்த 'வின்னர்' உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும்

இந்த வார நாமினேஷனில் குறி வைக்கப்பட்டவர்கள் யார் யார்?

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் படலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரமும் நாமினேஷன் நடைபெறுகிறது.

பிறந்த நாளில் பிரபல நடிகைக்கு மிஷ்கின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது 6 வருடங்கள் கழித்து 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்

என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா?  முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும்

துருவ் விக்ரமா இது? அப்பாவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல?

தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக மிகவும் மெனக்கெட்டு அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் மிகச் சிலர்தான் உள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசனை அடுத்து விக்ரம் தான் நடிப்பின் சிகரம்