இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வரும்!!! அமெரிக்க நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் மாடர்னா தெரபிடிக்ஸ் மருந்து நிறுவனம் கொரோனா வைரஸை எதிர்க்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டது. இந்த தடுப்பூசி மருந்து மலேரியா, தட்டம்மை தடுப்பு மருந்து போன்று இறந்த வைரஸ் கிருமிகளில் இருந்து உருவாக்கப் பட்டதல்ல. சீனா வெளியிட்ட கொரோனா மரபணுவைக் கொண்டு ஆய்வகத்தில் செயற்கையாக புதிய கொரோனா வைரஸை வளர்த்து அதன் மரபணுக் குறியீட்டில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டுள்ளதால் இந்த தடுப்பூசி எந்த பக்க விளைவுகளையும் உருவாக்காது. அதோடு இந்த தடுப்பூசி மூலம் கொரோனாவை எதிர்க்கும் வகையிலான நோய் எதிர்ப்பு ஆற்றலை மனித உடலில் உருவாக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்தத் தடுப்பு மருந்து முதல் கட்டமாக விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அடுத்தக் கட்டச் சோதனைக்கு அந்நாட்டின் தேசிய ஒவ்வாமை நோய் தடுப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனவே அமெரிக்க அரசும் மாடர்னா நிறுவனமும் இணைந்து மனிதர்களின்மீது சோதனை செய்ய 45 தன்னார்வலர்களை தேர்வு செய்தனர். பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட அந்தக் குழுவில் முதல் 8 பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதில் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணும் அடக்கம். முதல் குழுவினருக்குத் தடுப்பூசி போடப்பட்டு 1 மாதம் கழித்து இரண்டாவது முறையாகவும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் கண்காணிக்கப்பட்ட பின்னர், தற்போது கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து பேசிய மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை மருத்துவர், ”Mrna-1273 தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. கொரோனா வைரஸை எதிர்க்கும் எதிர்ப்பணுக்களை மனித உடலில் இந்த மருந்து மருந்து வெற்றிகரமாக உண்டாக்கி இருக்கிறது. அடுத்தக்கட்ட சோதனைக்கு 600 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மூன்றாவது கட்ட சோதனைக்கு மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப் படவும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்து உள்ளார்.
இந்நிறுவனம் தயாரித்து உள்ள Mrna-1273 தடுப்பூசியை செலுத்தும்போது குறைந்த அளவிலான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மருந்து செலுத்தப்பட்ட இடம் சிவந்து விடுவதாகவும் அதோடு வலி அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அதிகளவில் தடுப்பு மருந்து உடலில் செலுத்தப் படுவதால் இப்பிரச்சனைகள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். மேலும், உடல்வலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத வண்ணம் இந்த தடுப்பு உருவாக்கப்படும் எனவும் மாடர்னா நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
மூன்று கட்ட சோதனைகளும் வெற்றிப்பெற்ற பிறகு முறையான கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. Mrna-1273 மருந்தைத் தவிர இத்தாலி, ஜெர்மனி, இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளும் தடுப்பூசி சோதனையில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். கொரோனா சிகிச்சை மருந்துகள் குறித்து தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஒன்றே மக்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக மாறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com