குரங்குகளிடம் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை!!! நம்பிக்கை அளிக்கும் ஆய்வு முடிவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில நாடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள மருந்துகள் தற்போது மனிதர்களின்மீது பரிசோதிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை குரங்குகளின் மீது சோதித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
தற்போது அமெரிக்க தேசியச் சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள் நம்பிக்கை அளிக்கும் இந்த தடுப்பூசி குறித்து மகிழ்ச்சித் தெரிவித்து வருகின்றனர். “ரிஸஸ் மகாக்ஸ்” என்ற இனத்தைச் சேர்ந்த செம்முகக் குரங்குகளிடம் இந்த தடுப்பூசி மருந்து குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிப் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றை குரங்குகளுக்கு செலுத்தும்போது நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் பாதிப்பு போன்றவற்றிற்கு எதிராக தடுப்பூசி செயலாற்று வதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா நோய்க்கு எதிராக எதிர்வினை ஆற்றும் இந்த தடுப்பூசி குரங்குகளிடம் எந்த புதிய நோய் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை எனவும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
சார்ஸ் நோய்த் தடுப்பூசி சோதனையின் போது குரங்குகள் போன்ற விலங்குகளிடம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் பல புதிய நோய்களும் ஏற்பட்டது. புதிய நோய்த் தாக்கத்தால் சார்ஸ் வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் பெரும் தடை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளோடு இணைந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய தடுப்பூசி குரங்குகளிடம் எந்த புதிய நோயையும் ஏற்படுத்த வில்லை என்பதும் முக்கிய அம்சம். மேலும், சைட்டோகைன் போன்ற பாதிப்புகளையும் இந்தத் தடுப்பூசி ஏற்படுத்தவில்லை.
அதாவது தடுப்பூசி செலுத்துவதால் நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகளவு புரதங்களைச் சுரந்து நுரையீலில் கட்டிகளை உருவாக்கி விடும். இந்த ஆபத்தும் தடுப்பூசி ஆய்வில் பெருத்த ஏமாற்றத்தை தந்துவிடும். இதுபோன்ற எந்த ஆபத்தும் குரங்குகளிடம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் புதிய தடுப்பூசி பற்றிய எந்த தகவலும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப் படவில்லை. London School of Medicine பேராசிரியர் ஸ்டீஃபன் ஈவான்ஸ், இந்த தடுப்பூசி நம்பிக்கை அளிக்கும் உயர்தரத்தில் உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். கொரோனா ஆய்வுகளில் இதுவரை இருந்து வருகிற தடுமாற்றத்தை இந்தத் தடுப்பூசி போக்கும் எனவும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
மேலும் புதிய கொரோனா தடுப்பூசி குரங்குகளுக்கு நிமோனியா போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்த வில்லை. செம்முகக் குரங்கு எனப்படும் இந்த வகைக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போன்ற நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணத்தால் தான் தடுப்பூசி ஆய்வுகள் செம்முகக் குரங்குகளின் மீது நடத்தப் பட்டன. கொரோனாவுக்கு எதிராக குரங்குகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த மருந்து மனிதர்களிடம் இதே போன்று வெற்றி பெறுமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக் கழகத்தின் சார்பாக லண்டனில் 1000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை தேர்வு செய்து அவர்களிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout