கொரோனா வைரஸ்.. அதிக மக்கள்.. இந்தியா தாக்குப்பிடிக்குமா?! அமெரிக்கா கவலை.

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனாவை இந்தியா எப்படி கட்டுப்படுத்தும் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 2778 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.

அதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதை தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. மொத்தம் 80,000 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தோன்றி மூன்று மாதம் ஆகியும் இதன் வேகம் குறையவில்லை.

இந்த நிலையில் இந்தியாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இவர்கள் மூவருக்கும் இந்த வைரஸ் குணமாக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு உளவுத்துறை அமைப்புகள் இந்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் அதிகமான மக்கள் தொகை இதற்கு ஒரு காரணம். அதேபோல் சீனாவிற்கு மிக அருகில் இந்தியா இருக்கிறது. சீனாவில் இருந்து பலர் கடந்த சில மாதங்களில் இந்தியாவிற்கு பயணித்து இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது. ஆனால் இந்தியா இதற்கு எதிராக என்ன செய்யும் என்றும் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.

னா போன்ற நவீன வசதிகள் கொண்ட நாடுகளே கொரோனாவிடம் கஷ்டப்படுகிறது. அதனால் இந்தியா இதை எப்படி எதிர்கொள்ளும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது . இந்தியர்கள் அதிகம் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி உள்ளது. இந்தியாவிற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தானில் 3 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.

பாகிஸ்தானில் வைரஸ் பரவி இருப்பதால் வட இந்தியாவிற்கும் விரைவில் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்தியா மீது மட்டும் கவலை கொள்ளவில்லை. உலகில் இருக்கும் மற்ற வளரும் நாடுகளும் இதை எப்படி எதிர்கொள்ளும் என்ற சந்தேகத்தில் உள்ளது.

More News

சிஏஏ சட்டதிருத்தம்: களத்தில் இறங்க ரஜினிகாந்த் முடிவு

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமிய அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

இசைஞானின் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக்கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பகுதியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார்.

கமல்ஹாசனை மிஞ்சிய விக்ரம்: மிரட்டும் 'கோப்ரா' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

சியான் விக்ரம் நடிப்பில் 'டிமாண்ட்டி காலனி' 'இமைக்காநொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா

சம்மர் வரப்போகுது.. இந்தமுறை சாதாரணமா இருக்காது..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

இந்த ஆண்டு கோடை காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் மட்டுமல்ல.. ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என பரவும் கொரோனா வைரஸ்..!

ஈரான் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதுவரை 245 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.