டெல்டா+ ஒமைக்ரான்- அச்சுறுத்தும் புதிய உருமாறிய வைரஸ்!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

சைப்ரஸ் நாட்டில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பண்புகளைக் கொண்ட புதிய வைரஸ் மாதிரி ஒன்று பரவி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை WHO இன்னும் உறுதிப்படுத்தாமல் இருப்பதும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸின் ஸைபைக் மற்றும் அதன் மரபணுவில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, வரிசையில் தற்போது 15 ஆவதாக ஒமைக்ரான் வேரியண்ட் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டு வைரஸ்களும் இணைந்து புதிய உருமாறிய வைரஸ் சைப்ரஸ் நாட்டில் இதுவரை 25 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சைப்ரஸ் நாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் லியான்டியோஸ் காஸ்ட்ரிக்ஸ் இது டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் உருமாறிய மூலக்கூறு இது எனத் தெரிவித்து அதற்கு “டெல்டா கிரான்“ எனப் பெயரும் வைத்துள்ளார். மேலும் இதன் தன்மைகள் குறித்து ஆய்வுச்செய்யப் படவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் “டெல்டா கிரான்“ குறித்துப் பேசிய பிரபல விஞ்ஞானிகள் சிலர் டெல்டா கிரான் இரண்டு வெவ்று வைரஸ்களாக இருக்குமோ? என்று சந்தேகம் எழுப்பி வருகின்றனர். மேலும் இது உண்மையான உருமாறிய வைரஸாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.