மே 3 வரை எல்லாம் பத்தாது, 2022 வரை சமூக விலகல் வேண்டும்: ஹார்வர்டு பல்கலை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 2022ஆம் ஆண்டு வரை சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்தாலும் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குதலை ஆரம்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கு சமீபத்திய உதாரணம் தான் சீனா என்றும் கூறிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் முழுவதும் ஒழியும் வரை அல்லது கொரோனா வைரஸ்களை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறப்படுவதால் கிட்டத்தட்ட 2022ஆம் ஆண்டு வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்து பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலை இன்னும் சில மாதங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என்பதே விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments