சார்ஸ் வைரஸ் பாதிப்பினை மிஞ்சியது கொரோனா வைரஸ் – சீனாவில் 722 பேர் உயிரிழப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 722 பேர் இறந்துள்ளர். இந்த பாதிப்பு கொரோனா வைரஸ் தொகுதியான சார்ஸ் வைரஸ் பாதிப்பை விட அதிகமானது ஆகும். சீனா முழுவதும் 34,500 பேர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த 2002 – 2003 ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸ், சீனா மற்றும் ஹாங்காங்கில் 650 உயிர்களை பழி தீர்த்தது. சார்ஸ் வைரஸ் கடுமையான சுவாசக் கோளாறினை ஏற்படுத்தும் தீவிரம் கொண்ட வைரஸாக அறிவிக்கப் பட்டிருந்தது. சீனா, ஹாங்காங்கை தவிர்த்து உலகம் முழுவதும் 120 பேர் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
சீனா, கொரோனா வைரஸ் பாதிப்பினைக் கட்டுப்படுத்த வுஹான் நகரத்தில் 56 மில்லியன் மக்களை வீட்டுக் காவலில் பூட்டி வைத்துள்ளது என்றாலும் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகிறது. நகரத்தின் மையப் பகுதியைத் தாண்டி வெளி இடங்களில் இருக்கும் மக்களையும் வீட்டுக்குள் அடைந்து கிடக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் 2 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் தொற்று 25 நாடுகளில் பரவியது உறுதி செய்யப் பட்டுள்ளது.
உலக நாடுகளுக்கு இடையே அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளது என்றாலும் தற்போது இந்த வைரஸ் பாதிப்பு உலக மக்களையே அச்சுறுத்தி வருகிறது. மற்ற வைரஸ் பரவலை விட கொரோனா வைரஸின் பரவல் தன்மை தீவிரம் கொண்டதாக இருப்பதே இந்த அச்சத்திற்குக் காரமாணகும். இந்நிலையில் பல நாடுகளில் சீனாவில் இருந்து மக்கள் வருவதை தடை செய்துள்ளன. முக்கிய விமான நிலையங்களில் சீன விமான சேவையை பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments