கூட்டமாக கூடுவதைத் தவிருங்கள்..! இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.
- IndiaGlitz, [Friday,March 06 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிருங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் போராட்டங்களுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பல நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், படப்பிடிப்புகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. IIFA தனது சினிமா விருது வாங்கும் விழாவை ஒத்திவைத்துள்ளது.ஹோலி கொண்டாட்டமானது தடை செய்யப்பட்டுள்ளது. இன்று டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது. இத்தோடு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது 31-ஆக உயர்ந்துள்ளது.
தமிழநாட்டைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் காற்றில் பரவும் என்பதால் கட்டுப்படுத்துவதற்கு கடினம் தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. N95 முகமூடிகள், சானிடைசர்கள் போன்றவை விலை உயர்த்தி விற்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.