கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா??? பதைக்க வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Wednesday,December 02 2020]
தற்போதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பற்றிய அச்சம் இல்லாமலே பெரும்பாலான பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர். இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் மூக்கு வழியாக சென்று மூளைக்குள் நுழைந்து விடுகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்பினால் மனித மூளையில் வைரஸின் RNA மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (cerebrospinal fluid) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் மூளைக்குள் எப்படி கொரோனா வைரஸ் சென்றது என்பது குறித்த முழுமையான தகவல் எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்து வந்தது. இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள சரைட் யுனிவர்சிட்டாஸ் மெடிசினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுவாச குழாய் வழியாக கொரோனா வைரஸ் மனித மூளைக்குள் சென்று விடுகிறது என்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து உள்ளனர்.
மேலும் இத்தகைய பாதிப்பினால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற தகவலையும் அந்த விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். இதுவரை மூளைக்குள் புகுந்து விட்ட கொரோனா பாதிப்பினால் 33 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் நேச்சர் நியூரே சயின்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டு உள்ளனர். இந்த
மேலும் மூக்கு வழியாக செல்லும் கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தை மட்டுமல்ல, மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால்தான் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு நரம்பியல் பாதிப்பினால் ஏற்படும் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதில் வாசனை இழப்பு, சுவை இழப்பு, தலைவலி, சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் அடக்கம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.