பரிசோதனையில் ஜெர்மனி கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி!!! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்!!!
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
ஜெர்மனியின் Biotechnology நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer உடன் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதனை செய்யவிருக்கிறது. அமெரிக்கா உட்பட உலகில் நான்கு பெரிய தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக, அமெரிக்காவின் மாடர்னா தெரபெடிக்ஸ் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி மனிதர்களின் மீது பரிசோதனையை ஆரம்பித்து விட்டது. தற்போது ஜெர்மனியின் தடுப்பூசி பரிசோதனைக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பார்த்த காலத்திற்கு முன்னதாகவே ஜெர்மன் நிறுவனத்தின் தடுப்பூசி தயாராகியிருப்பது குறித்து அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஜெர்மன் Biotechnology நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் மிகவிரைவாக மனிதர்களின் மீது பரிசோதனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசி சோதனைக்காக 18 வயது முதல் 55 வயதுடைய 200 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.