இந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் குறித்து இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. ஆனால் கொரோனா வைரஸின் முதல் அறிகுறி காய்ச்சல் என்பதால் இத்தகைய நடவடிக்கைகளை இந்திய சுகாதாரத் துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கேரளாவில் 9 பேரும் மும்பையில் 2 நபர்களும் தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற விமான நிலையங்களில் சீனா , ஹாங்காங், சவுதி போன்ற நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகளை தீவிர மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.
இதுவரை சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகள் யாருக்கும் கொரோனா வைரஸின் நோய் தொற்று இல்லை. ஆனால் 11 பேருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா (nCoV) வைரஸ் முதலில் காய்ச்சலை ஏற்படுத்துகிறது என்பதால் இதுவே அந்த வைரஸ் க்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
முன்னதாக கேரளாவில் பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டதாகக் கருதி சிகிச்சை பெற்று வந்தார். பின்பு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதே போல மும்பையிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கருதப் பட்டு பின்னர் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
சென்ற வாரத்தில் மட்டும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கேரளாவிற்கு 100 க்கும் மேற்பட்ட பயணிகள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் மூன்று பயணிகள் உடல் நிலை பாதிப்படைந்திருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகக் கருதி மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குளிர், பயணம், வயது போன்ற காரணங்களால் சாதாரண உடல் பாதிப்புகளையே கொண்டிருக்கின்றனர் என்று சோதனையில் தெரிவிக்கப் பட்டது. மேலும் 73 பயணிகளை கேரள மருத்துவ நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப் படவில்லை என்பதை அந்நாடு சுகாதாரத் துறை உறுதி செய்தது.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் இறைச்சி கூடத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸால், சீனாவில் 41 பேர் இறந்துள்ளர். மேலும் 900 பேருக்கு இந்த வைரஸின் மூலமாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஜனவரி 23 அன்று இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் தன்மை கொண்டது என உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. இதனால் சீனாவின் 13 எல்லை பகுதிகளில் மூடப்பட்டுள்ளன.
உலகச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் உலக சுகாதார அமைப்பு (WHO) அவசர நிலையைப் பிறப்பிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாளியுள்ளன.
இத்தாலி, நோபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் இதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் குறித்து இந்திய சுகாதாரத் துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout