கொரோனா பாதித்த குழந்தைகளைத் தாக்கும் மர்மநோய்!!! எச்சரிக்கை விடுக்கும் நியூயார்க் மாகாணம்!!!

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

 

நியூயார்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகளை  மேலும் ஒரு மர்மநோய் தாக்கியிருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகியது. மேலும் இந்த மர்மநோய் ஏற்படுத்தும் பாதிப்புகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் நியூயார்க்கின் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நோய் அறிகுறிகள் பல ஐரோப்பிய நாடுகளிடம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.  

புதிதாகப் பரவிவரும் மர்ம நோய் குறித்து நியூயார்க் சுகாதாரத் துறை அதிகாரிகள், “கொரோனா பாதிப்பினால் இரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கம்” என்று விளக்கம் அளித்து இருந்தனர். 2 முதல் 15 வயதிற்குட்பட்ட கொரோனா பாதித்த குழந்தைகளைத் தாக்கியதாக் கூறப்பட்ட இந்நோய், நச்சு தன்மை அல்லது Kawasaki நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள் எனவும் சந்தேகம் எழுப்பப் பட்டது.

தற்போது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் இந்த மர்மநோய் பற்றி அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி மாநில நோய்த்தொற்று (CTC) மையம் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோன்ற மர்ம அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகளைப் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதனால் பல மாகாணங்களில் இருந்து தற்போது பல புதிய வழக்குகள் பற்றிய விவரங்கள் அறியப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் புதிய மர்ம நோய் பற்றிய விவரங்களை சேகரித்து இந்த வாரம் அதைப் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் நியூயார்க்கின் நோய் தொற்று நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிதாக கொரோனா பாதித்த குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த மர்மநோயை “Pediatric Multi System” எனக் குறிப்பிட்டு வருகின்றனர். அதாவது குழந்தைகளிடம் தோன்றும் பலவகைப்பட்ட உறுப்புகளின் வீக்கம் என்ற பொருளில் இந்த மர்மநோய் புரிந்து கொள்ளப் படுகிறது. நீயூயார்க் முழுவதும் 5-9 வயதுடைய குழந்தைகளுக்கு 29% மற்றும் 10-14 வயது குழந்தைகளிடம் 28% இந்த புதிய மர்ம நோய்த் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக 3 இளைஞர்கள் இந்நோய்த் தாக்கத்தால் இறந்து விட்டதாக அம்மாநில கவர்னர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது, 5 வயது, 7 வயது, 18 வயதுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கவாசாகி என்பது செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோய். இதனால் இதயத்திற்கு ரத்தம் செல்வது தடைபடும் அபாயமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது நியூயார்க்கில் பரவிவரும் இந்தநோய் கவாசாகி அறிகுறிகளோடு ஒத்துப்போவதாக அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர். இன்னொரு பக்கம், இது சைட்டோகைனாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் வலுவாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று அவர்களைத் தாக்கும்போது அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலம் அந்நோய்க்கு எதிராக புரதங்களைச் சுரந்து நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். நுரையீரலில் அதிகபடியான எதிர்ப்புச் சுரப்பிகள் சேர்வதால் நீர்க்கோர்வை ஏற்பட்டு கட்டிகள் உருவாகும். இந்தக் கட்டிகள் வீக்கத்தை ஏற்படுத்தி கடுமையான சுவாசப்  பிரச்சனையை வரவழைத்து விடும்.

தற்போது புதிதாக கொரோனா பாதித்த குழந்தைகளிடம் பரவிவரும் இந்த மர்மநோய் இதுபோன்ற நோய் எதிர்ப்பு சுரப்பிகளால் ஏற்படும் சைட்டோகைன் பிரச்சனையாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும், மர்மநோயைப் பற்றி தெளிவு பெறுவதற்காக குழந்தைகளைத் தாக்கும் 100 நோய்கள் குறித்து ஆய்வு  செய்யப்பட்டு வருவதாக நியூயார்க் மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஆண்ட்ர கியூமோ குறிப்பிட்டு உள்ளார். 

More News

இதிலும் கீழ்த்தரமான அரசியலா? 10ஆம் வகுப்பு மாணவி கொலை குறித்து பிரபல நடிகர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கொரோனா நோயில் உடல் பருமனாக இருப்பதும் பெரிய ஆபத்தா??? மருத்துவக் காரணம் என்ன???

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளில் வயதை அடுத்து உடல் பருமனும் முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படையப்பா ஸ்டைலில் வருங்கால கணவரை கலாய்த்த தமிழ் நடிகை!

தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானிசங்கர், கோலிவுட் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜின் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

'யூ ஆர் தி ரியல் ஹீரோ': சென்னை போலீசுக்கு பாட்டு பாடி நன்றி கூறிய 'மாஸ்டர்' நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வைரஸிடம் இருந்து பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்,

ரூ.20 லட்சம் கோடி யார் யாருக்கு? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு