தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் மகளிர் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையில் 57 மாணவிகள் மற்றும் 1 ஆசிரியை, மாணவிகளின் பெற்றோர் 11 பேர் என ஒட்டுமொத்தமாக 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் மதுக்கூர் அருகே உள்ள ஆலந்தூர் அரசு பள்ளியில் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் அடுத்தடுத்து 3 பள்ளிகளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதைத்தவிர தற்போது தஞ்சாவூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் கடந்த சில தினங்களாக கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து பெற்றோர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments