கொரோனாவே இறுதி அல்ல: தீவிர கொள்ளை நோய்களும் வரப்போகிறது!!! பீதியைக் கிளப்பும் விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

 

இதுவரை மனிதர்களை பாதித்த கொள்ளை நோய், பெருந்தொற்று போன்றவை வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். கடந்த 20 வருடங்களில் இந்த உலகம் 6 பெருந்தொற்றுகளை சந்தித்து இருக்கிறது. இவையனைத்தும் வனவிலங்குகளிடம் இருந்து ஏற்பட்டவை. அதில் 5 பெருந்தொற்றுகளை இந்த உலகம் கடந்து விட்டது. தற்போது கொரோனா என்ற பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இதுவே கடைசி என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது என்ற பீதியை விஞ்ஞானிகள் கிளப்பி இருக்கின்றனர்.

இதுகுறித்து, லிவர்பூர்ல் பல்கலைக்கழக் விஞ்ஞானியான மாத்யூ பேலிஸ் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நாம் ஐந்து ஆபத்துகளில் இருந்து தப்பிவிட்டோம். ஆனால் ஆறாம் ஆபத்து நம்மை பிடித்துக் கொண்டுவிட்டது” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றை சந்தித்துள்ளோம். தற்போது கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாம் எதிர்க்கொள்ள போகும் கடைசி நோய்த்தொற்று இதுவாக இருக்கப் போவதில்லை என்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்றும் மாத்யூ பேலிஸ் கூறியுள்ளார்.

வன விலங்குகள், மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் கிருமிகள் பற்றிய விரிவான தகவல் தொகுப்புகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது லிவர்பூர்ல் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், வைரஸ்களில் தொற்றை ஏற்படுத்தும் வன விலங்குகளின் நடைமுறைகளை கூர்ந்து கவனித்து ஒரு தெளிவான நடைமுறையை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைகளில் ஆய்வு செய்யப்படும்போது நோய்த் தாக்குதல் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் புதிதாக வரும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை, தடுப்பு மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த புதிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது எந்த நோய், பெருந்தொற்றாக மாறும் என்பதையும் எளிதாக கணிக்க முடியும் எனவும் மாத்யூ பேலிஸ் தெரிவித்து உள்ளார்.

More News

“உடைந்த விரலுடன் 4 போட்டிகளில் 439 ரன்கள் எடுத்தேன்” - மனம் திறந்த கிரிக்கெட் வீரர் ஷ்ரயாஸ் ஐயர்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரராக இடம்பிடித்து இருக்கும் இளம் வீரர் ஷ்ரயாஸ் ஐயர்.

அறிகுறியே இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவுமா??? WHO வின் பதில் என்ன???

இந்தியாவில் பரவும் கொரோனா நோய்த்தொற்று பலருக்கும் நோய் அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை என்ற கருத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு இருந்தது

கொரோனாவுக்கு பூஜை நடத்திய இந்தியப் பெண்கள்!!! எங்கே தெரியுமா???

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளில் விஞ்ஞானிகள் முயற்சி செய்துவரும் நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனா தேவிக்கு பூஜை நடத்தப்பட்டு இருப்பது அதிச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் அரசு ஊடகம்!!! கொதித்த அதிபர் இம்ரான்கான்!!!

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான ஊடகம் பி.டி.வி வெளியிட்ட ஒரு செய்தி அந்நாட்டு மக்களைக் கொதிப்படைய செய்திருக்கிறது.

உலகத்தையே சொந்தமாக்க நினைத்த மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று...

Lord of Asia என்றழைக்கப்படும் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மாவீரன் அலெக்சாண்டர் உலகில் பெரும் பகுதிகளை வெற்றிக் கொண்ட வரலாற்றை மட்டுமே நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம்