கொரோனாவே இறுதி அல்ல: தீவிர கொள்ளை நோய்களும் வரப்போகிறது!!! பீதியைக் கிளப்பும் விஞ்ஞானிகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை மனிதர்களை பாதித்த கொள்ளை நோய், பெருந்தொற்று போன்றவை வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர். கடந்த 20 வருடங்களில் இந்த உலகம் 6 பெருந்தொற்றுகளை சந்தித்து இருக்கிறது. இவையனைத்தும் வனவிலங்குகளிடம் இருந்து ஏற்பட்டவை. அதில் 5 பெருந்தொற்றுகளை இந்த உலகம் கடந்து விட்டது. தற்போது கொரோனா என்ற பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இதுவே கடைசி என்றும் நினைத்துக் கொள்ளக் கூடாது என்ற பீதியை விஞ்ஞானிகள் கிளப்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து, லிவர்பூர்ல் பல்கலைக்கழக் விஞ்ஞானியான மாத்யூ பேலிஸ் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “நாம் ஐந்து ஆபத்துகளில் இருந்து தப்பிவிட்டோம். ஆனால் ஆறாம் ஆபத்து நம்மை பிடித்துக் கொண்டுவிட்டது” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஏவியான் இன்புளூயன்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் ஆகியவற்றை சந்தித்துள்ளோம். தற்போது கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாம் எதிர்க்கொள்ள போகும் கடைசி நோய்த்தொற்று இதுவாக இருக்கப் போவதில்லை என்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும் என்றும் மாத்யூ பேலிஸ் கூறியுள்ளார்.
வன விலங்குகள், மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் கிருமிகள் பற்றிய விரிவான தகவல் தொகுப்புகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது லிவர்பூர்ல் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், வைரஸ்களில் தொற்றை ஏற்படுத்தும் வன விலங்குகளின் நடைமுறைகளை கூர்ந்து கவனித்து ஒரு தெளிவான நடைமுறையை உருவாக்கும் முயற்சியும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைகளில் ஆய்வு செய்யப்படும்போது நோய்த் தாக்குதல் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் புதிதாக வரும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை, தடுப்பு மருந்துகளும் விரைவில் கண்டுபிடிக்க முடியும். மேலும் இந்த புதிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது எந்த நோய், பெருந்தொற்றாக மாறும் என்பதையும் எளிதாக கணிக்க முடியும் எனவும் மாத்யூ பேலிஸ் தெரிவித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com