கொரோனாவே முடியல... அதுக்குள்ள எபோலாவா??? இரண்டாவது அலை தொடங்கி இருப்பதாக WHO அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Wednesday,June 03 2020]
காங்கோவில் எபோலாவின் இரண்டாவது அலை ஆரம்பித்து இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தில் இருந்தே உலக நாடுகள் மீண்டு வராத நிலையில் எபோலாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியிருப்பதாக WHO தெரிவித்து இருக்கிறது. இதுவரை காங்கோவில் 6 பேருக்கு எபோலா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்றும் அதில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமிருக்கும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள WHO இது எளிதில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளுள் ஒன்று எனவும் அதனால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. எபோலா 1976 இல் இருந்து பல முறை ஆப்பிரிக்க நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஏற்பட்டு இருக்கும் பரவல் 11 ஆவது முறை என்றும் கூறப்படுகிறது. காங்கோவில் இருக்கும் ஈக்வடார் பகுதியில் உள்ள ம்பண்ட்கா என்ற இடத்தில்தான் தற்போது எபோலா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது.
WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கடந்த திங்கள் கிழமை வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், “காங்கோ கொரோனாவுக்கு நடுவில் எபோலா நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டிய தேவையில் இருக்கிறது. இது உலக நாடுகளுக்கு மற்றொரு சுகாதார நெருக்கடியாக அமையலாம்” எனக் கூறியிருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா நோய்த்தொற்றால் 2,243 பேர் உயிரிழந்தனர். ஈக்வடாரில் அப்போதைய உயிரிழப்பு 33 ஆக இருந்தது எனவும் தகவல் தெரிய வந்துள்ளது. தற்போது ஈக்வடாரில் இரண்டாவது முறையாக நோய்த்தொற்று பரவ ஆரம்பித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
A new #Ebola outbreak detected in western #DRC, near Mbandaka, Équateur province. @MinSanteRDC has identified 6 cases, of which 4 people have died. The country is also in final phase of battling Ebola in eastern DRC, #COVID19 & the world’s largest measles outbreak.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) June 1, 2020