ஒரு மனிதனை நரபலி கொடுத்தால் கொரோனா கட்டுப்பாடுக்குள் வரும்!!! கோவில் பூசாரியின் விபரீத முடிவு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சார்ந்த பூந்தவஹீதா என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவி கோயில் பிராமணதேவி கோவில் என அழைக்கப் படுகிறது. இந்தக் கோவிலில் பூசாரியாக சன்சாரி ஓஜா (70) என்பவர் வேலைப் பார்த்து வருகிறார். கோவிலுக்கு கடந்த புதன் கிழமை மாலை 52 வயதான சரோஜ் குமார் பிரதான் என்பவர் சாமி கும்பிட வந்திருக்கிறார். அவரிடன் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் ஒரு மனிதனை நரபலிக் கொடுக்க வேண்டும் என பூசாரி தகவல் சொல்லியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சரோஜை தாக்கி மண்டையை உடைத்து, கோடாரிக் கொண்டு தலையை தனியாக வெட்டி எடுத்து இருக்கிறார்.
பின்பு பக்கத்தில் உள்ள நரசிங்க்பூர் காவல் நிலையத்திற்கு தானாகவே வந்து, மனிதக் குலத்தை கொரோனா நோயில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால் ஒரு உயிரைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். “என்னுடைய கனவில், தேவி (சாமி) வந்து ஒரு மனிதனை நரபலிக் கொடுத்தால் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என கூறியது“ என்றும் காவல் நிலையத்தில் தான் செய்த காரியத்திற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பூசாரியை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, பலிக்கொடுக்கப் பட்ட சரோஜ் குமார் பிரதானுக்கும் பூசாரிக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வருகிறது. எனவே பகையை மனதில் வைத்துக் கொண்டு அவரைக் கொலை செய்து விட்டு பூசாரி நாடகமாடுகிறார் என்றும் கிராம மக்கள் சந்தேகத்தை தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments