கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது...! நிலவரம் கூறுவது என்ன...?
- IndiaGlitz, [Tuesday,June 08 2021]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப்பிறகு, 1 லட்சத்துக்கும் குறைந்துள்ளது.
இரண்டாம் கட்ட கொரோனா அலையானது நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களின் பல உறவுகளை கொரோனாவால் இழந்து வாடி வருகிறார்கள். மூன்றாம் அலையில் குழந்தைகள் பலரும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 86,498 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 2,89,96,473- ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பை பார்த்தால், கடந்த 63 நாட்களை விட மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அதேபோல் 24 மணிநேரத்தில் 2,123 பேர் இத்தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,51,309-ஆக உயர்ந்துள்ளது.
அண்மையில் நோய் குணமாகி 1,82,282 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,41,462-ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 13,03,702 -பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை நம் நாட்டில், 23,61,98,726 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, இதுகுறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.