தமிழகத்தில் குறையும் கொரோன பாதிப்பு....! மக்கள் நிம்மதி பெருமூச்சு....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று 8,183 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழப்பு என்பது 200-க்கும் கீழ் குறைந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டில் இன்று 1,65,102 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 8,183 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு என்பது இருபத்தி நான்கு லட்சத்து14,680 -ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக நிலவரம்:
கோவை - 1,014 பேர்
ஈரோடு - 933 பேர்
சேலம் - 533 பேர்
சென்னை - 468 பேர்
கடந்த 24 மணி நேரத்தில்,
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் - 18,232 பேர்
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 23,04,885 பேர்
தினசரி உயிரிழப்பு - 180 பேர்
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 31,015 பேர்
கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், சென்ற 3 நாட்களாக பாதிப்பு என்பது குறைந்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments