கொரோனா சிகிச்சை: சிகாகோவில் வெற்றிபெற்ற Remdesivir மருந்து சீனாவில் படுதோல்வி!!! நடந்தது என்ன???

  • IndiaGlitz, [Friday,April 24 2020]

 

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றதாகச் செய்தி வெளியிட்டது. சிகாகோ Gilead Sciences மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து கொரோனோ நோயளிகளும் குறைந்தது 6 அல்லது 7 நாட்களுக்குள்ளாக வீடுதிரும்பினர் எனக் கூறப்பட்டது. அந்த மருத்துவமனையில் நோயின் தீவிரம் கண்ட பெரும்பாலான கொரோனா நோயளிகளுக்கு Remdesivir மருந்து கொடுக்கப்பட்டதாகவும் அதில் 2 நபரைத் தவிர மற்ற எல்லோரும் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டது. Remdesivir மருந்தைப் பயன்படுத்திய 125 கொரோனா நோயாளிகளில் 113 பேர் நல்ல முறையில் குணமடைந்தனர் எனவும் கூறப்பட்டது. மேலும், இந்தச் சோதனையானது பகுதியளவு முடிவுகளை மட்மே கொண்டிருக்கும். எனவே கொரோனாவுக்கு Remdesivir தான் சிறந்த மருந்து எனக் கூறிவிட முடியாது எனவும் அந்தப் பல்லைக்கழகம் குறிப்பிட்டு இருந்தது.

அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள்சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து செயலிழந்துவிடும். கொரோனா நாவல் வைரஸ்க்குமுன் Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின்போது நல்ல பலனை அளித்தது.

சிகாகோ Gilead Sciences பல்கலைக்கழகத்தின் வெற்றியால் பல நாடுகள் கொரோனா சிகிச்சையில் இந்த மருந்தைப் பயன்படுத்தி சோதனை செய்து வருகின்றன. கொரோனா சிகிச்சையில் நல்ல பலனைக் கொடுப்பதாகக் கருதப்பட்ட Remdesivir மருந்து தற்போது சீனாவில் படுதோல்வி அடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதனை WHO வும் உறுதிப்படுத்தியிருக்கிறது. சோதனைக்காக 237 கொரோனா நோயாளிகளுக்கு ஒரு மாதம் Remdesivir மருந்து செலுத்தப்பட்டது. சிலருக்கு Remdesivir மருந்தின் மாதிரியும் செலுத்தப்பட்டன. முடிவில் இதன் நல்ல பலனை தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Remdesivir மருந்து செலுத்தப்பட்டவர்களில் 13.9% பேருக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதன்மாதிரி செலுத்தப்பட்டவர்களில் 12.8% பேர் மரணத்தை தழுவியுள்ளனர். மேலும், பலருக்கு பக்க விளைவுகளும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே சோதனையில் ஈடுபட்ட சீன மருத்துவர்கள் தற்போது, சிகாகோ Gilead Sciences பல்கலைக்கழகம் WHO விற்கு தவறான முடிவினை அளித்து விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ரோகுளோரோகுயின், இன்டர்ஃபிரான் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர Remdsivir, ritonavir/lopinavir போன்ற மருந்துகளும் சோதனையில் உள்ளன. இப்படியான நெருக்கடியில் பல நாடுகள் குணமடைந்த கொரோனா நோயளிகளிடமிருந்து அவர்களது பிளாஸ்மாக்களை பெற்று சிகிச்சைக்கு பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் மேற்கண்ட எந்த மருந்துகளிலும் உறுதியாக கொரோனா குணமடையும் என்ற நம்பிக்கையை மருத்துவ உலகம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.