கொரோனா சிகிச்சை: Remdesivir மருந்து தயாரிப்பில் இந்தியாவின் அடுத்தக் கட்டம்!!!

  • IndiaGlitz, [Friday,May 15 2020]

 

கடந்த மாதம், அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தை பயன்படுத்தி அதில் வெற்றிப் பெற்றதாகச் செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையில் Remdesivir மருந்தை கொடுக்கும்போது அவர்கள் நல்ல பலனை பெறுவதாகவும் குறைந்த நாட்களிலேயே வீடு திரும்புவதாகவும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.

அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து பின்பு செயலிழந்துவிடும். இதற்குமுன், இந்த Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின் போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்தியாவும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படும் இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான பணியில் இறங்கியுள்ளது. முன்னதாக ஐதராபாத்தில் உள்ள Indian Institute of Chemical Technology விஞ்ஞானிகள் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப் பொருள்களை வெற்றிகரமாக தொகுத்தார்கள். ஆனால் முழுமையாக மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை இந்தியாவிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அமெரிக்காவின் Gilead Sciences மருந்து தயாரிப்பு நிறுவனம் Remdesivir மருந்து தயாரிப்பதற்கான ஒப்புதலை இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. காப்புரிமை பெறப்பட்ட 5 நிறுவனங்களில் இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கி இருக்கிறது. இந்நிறுவனங்கள் மூலம் மேலும், 127 நாடுகளுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்து கொடுக்க முடியும் எனத் தற்போது இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

More News

170 வருட நன்றியை திருப்பி செலுத்தும் அயர்லாந்து மக்கள்!!! மனதைப் பிழியும் வரலாற்றுச் சம்பவம்!!!

உலகில் வல்லரசு நாடாக விளங்கிவரும் அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையான அழிவுகளைச் சந்தித்து வருகிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.

டாஸ்மாக் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 7-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி

10 நாட்கள் வித்தியாசத்தில் ஜோதிகாவை முந்திய கீர்த்திசுரேஷ்!

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாக உள்ளது என்பதும் இந்த படம் வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது

எதையும் செய்ய தயாராக இருக்கின்றேன்: கதறி அழும் தமிழ் குடும்ப வீடியோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளிமாநிலங்களுக்கு வேலை நிமித்தம் சென்ற லட்சக்கணக்கான குடும்பங்கள்