கொரோனா சிகிச்சை: Remdesivir மருந்து தயாரிப்பில் இந்தியாவின் அடுத்தக் கட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம், அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தை பயன்படுத்தி அதில் வெற்றிப் பெற்றதாகச் செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையில் Remdesivir மருந்தை கொடுக்கும்போது அவர்கள் நல்ல பலனை பெறுவதாகவும் குறைந்த நாட்களிலேயே வீடு திரும்புவதாகவும் அந்தப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து பின்பு செயலிழந்துவிடும். இதற்குமுன், இந்த Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின் போதும் நல்ல பலனை அளித்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படும் இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான பணியில் இறங்கியுள்ளது. முன்னதாக ஐதராபாத்தில் உள்ள Indian Institute of Chemical Technology விஞ்ஞானிகள் இந்த மருந்துக்கான முக்கிய வேதிப் பொருள்களை வெற்றிகரமாக தொகுத்தார்கள். ஆனால் முழுமையாக மருந்து தயாரிப்பதற்கான காப்புரிமை இந்தியாவிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அமெரிக்காவின் Gilead Sciences மருந்து தயாரிப்பு நிறுவனம் Remdesivir மருந்து தயாரிப்பதற்கான ஒப்புதலை இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. காப்புரிமை பெறப்பட்ட 5 நிறுவனங்களில் இந்த மருந்தைத் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கி இருக்கிறது. இந்நிறுவனங்கள் மூலம் மேலும், 127 நாடுகளுக்கு இந்த மருந்தை உற்பத்தி செய்து கொடுக்க முடியும் எனத் தற்போது இந்திய அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com