கொரோனா பரவல்: குழந்தைகளின் மனநலனைக் காக்க என்ன செய்யலாம்???
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா உலக மக்களின் மனநிலையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சிலர் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தைகளின் மனநிலை இன்னும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே குழந்தைகளின் மனநிலையை பாதுகாக்க செய்ய வெண்டிய வழிமுறைகளைக் குறித்து சென்னை மாநகராட்சி சில வழிமுறைகளை பரிந்துரை செய்திருக்கிறது. இதுகுறித்து தி இந்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.
1.ஏக்கம், பின்வாங்குதல், கோபத்தை வெளிப்படுத்துதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்கள் மூலம் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிக்காட்டலாம்.
2.குழந்தைகளுக்கு கூடுதல் அன்பையும், கவனத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம்.
3. கடினமான காலங்களில் பெரியவர்களின் துணை தேவை. குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்.
4. குழந்தைகளின் கருத்துகளுக்கு செவிசாயுங்கள். இந்நிலை சரியாகும் என்று உறுதியளியுங்கள்.
5.குழந்தைகள் விளையாடவும் ஓய்வெடுக்கவும் அதிக வாய்ப்புகளைக் கொடுங்கள்.
6.பெற்றோரும் குடும்பத்தினரும் நெருக்கமாக இருங்கள். ஒருவேளை பிரிந்திருக்க வேண்டிய சூழலில் (மருத்துவமைனையில் அனுமதி) குழந்தைகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுங்கள்.
7.பள்ளி/கற்றல் சம்பந்தமாக புத்துணர்ச்சி தரும் புதிய சூழல் தேவை. குழந்தைகள் பாதுகாப்பாக விளையாட புதிய பழக்கங்களை உருவாக்குங்கள்.
8.கொரோனா தொற்று குறத்த சரியான சமீபத்திய தகவல்களை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்குங்கள். பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் கற்பித்தல் அவசியம்.
9.சூழ்நிலைகள் எதிர்கொள்ளும் வழிமுறைகளை (உதாரணத்துக்கு குடும்பத்தில் யாராவது மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால்) விளக்க வேண்டும். இவ்வாறு சென்னை மாநகராட்சி தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout