கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்கள் மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Tuesday,March 31 2020]
கடைகளில் வாங்கும் காய்கரி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருக்குமா என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க உணவுப்பொருள் வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்
கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் மீது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ அல்லது அந்த காய்கறி பழங்களை தொட்டாலோ அதில் கொரோனா கிருமி இருக்குமா? அந்த பொருட்களை நாம் தொடுவதன் மூலமாகவும் அந்த காய்கறி, பழங்களை நாம் சாப்பிடுவதாலும் நமக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதா? என்ற சந்தேகங்களுக்கு அமெரிக்க உணவுப்பொருட்கள் ஆய்வு நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை தொட்டிருந்தால் அதில் கொரோனா வைரஸ் இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள நிபுணர்கள், அதற்காக காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை சோப்பு போட்டு கழுவுவது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பாத்திரங்களை கழுவ மட்டுமே சோப்பு உருவாக்கப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை கழுவும் சோப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இல்லை அமெரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர். சோப்பு நீரில் கழுவும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உள்பட ஒருசில உடல் உபாதைகள் ஏற்படும்அமெரிக்க வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்
இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகம் இருக்கும் உணவு பொருட்களை தொட்டால் உடனடியாக கைகளை நன்றாக கழுவிட வேண்டும் என்றும், அதில் கொரோனா வைரஸ் இருந்தாலும் நன்கு சமைத்துவிட்டால் வைரஸ் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அதேபோல் பழ வகைகளை தோல் நீக்கி குளிர்ந்த நீரில் கழுவி தோல் நீக்கி உட்கொள்வது சிறந்தது என்றும்நிபுணர்கள் கூறுகின்றனர்