மனசாட்சியே இல்லையா உங்களுக்கு? விரக்தியில் கதறும் நர்ஸ்… வைரல் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,May 19 2021]
கொரோனா நேரத்தில் மக்களை வீட்டில் இருக்குமாறு அரசாங்கமும், மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்படி இருந்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் படு மோசமாக பரவி வருகிறது. இந்தப் பரவலை அடுத்து 3 ஆவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை, ரெம்டெசிவிர் மருந்து இல்லை இப்படி இந்தியா முழுக்க தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதோடு ஒரு சில மாநிலங்களில் தற்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனாவிற்கு நேரத்தில் பொதுமக்களை விட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என இவர்கள் படும்பாடும் சொல்லி மாளாது எனும் அளவிற்கு இருக்கிறது. காரணம் மளமளவென குவியும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி முழுப் பொறுப்பும் இவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதேபோல கொரோனாவில் இருந்து தப்பிக்க இவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அதைவிட கொடுமை. இதுபோன்ற சமயங்களில் தங்களது சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அரசாங்கம் ஒதுக்கும் இடத்திலேயே மருத்துவப் பணியாளர்கள் தங்கி வருகின்றனர். மேலும் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருவதால் மனதளவிலும் உடல் அளவிலும் சோர்ந்து போகின்றனர்.
இத்தகையதொரு அரும்பணி ஆற்றிவரும் மருத்துவப் பணியாளர்களுக்கு நாம் நன்றி செலுத்தி வருகிறோம். ஆனால் அவர்களின் நிலையில் இருந்து சிந்தனை செய்வதற்கு வசதியாக ஒரு செவிலியர் தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி அனைவரது மனைதையும் உருக்கி வருகிறது.