சில அடி தூரத்தில் மகள் இருந்தும் நெருங்க முடியாத தாய்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸால் தினமும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்ஸ்களும் வீட்டிற்கு செல்ல முடியாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் பணிபுரியும் பெண் ஒருவர் தன்னுடைய மகள் கண்முன் சில அடி தூரம் இருந்தும் அவரை நெருங்க முடியாத நிலையில் இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்க்க வேண்டும் என்று அவரது 5 வயது மகள் அழுததால் அவருடைய தந்தை மருத்துவமனைக்கு மகளை அழைத்து சென்றார். ஆனால் மகள் தன் கண்முன் சில அடிகள் தூரத்தில் இருந்த போதும் அவரை நெருங்க முடியாமல் அந்த தாய் பரிதவித்த தவிப்பும், ‘மம்மி பக்கத்தில வா’ என அந்த குழந்தை அழுத அழுகையும் பார்ப்போரை கண்கலங்க செய்தது.

கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை நெருங்க முடியாத சோகத்தில் அழும் மகளை தூரத்திலிருந்தே பார்த்த தாய், மகள் கதறி அழுவதை பார்க்க சகிக்காமல் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படியும் விரைவில் தான் வீடு திரும்புவதாக சமாதானம் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பரவல்;  உலகில் முக்கியத் தலைவர்களின் நேர்மறை, எதிர்மறை கருத்துகளின் தொகுப்பு!!!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே உலகளவில் சில பொருத்தமற்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

நீங்கள் கதை பிரியர்களா? இதோ உங்களுக்காக ஒரு சேனல்

சினிமா செய்திகளை அவ்வப்போது சினிமா ரசிகர்களுக்கு சுடச்சுட தந்து கொண்டிருக்கும் Indiagitz, Newsglitz மூலம் டிரெண்ட்

நாட்டாமையின் வேற லெவல் ஃபெர்மாமன்ஸ்: வைரலாகும் அருண்விஜய் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது

தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்

தனது ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளரின் சுவாரஸ்யமான சம்பவம் தான் இந்த கதை