கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுகிறது; உலக நாடுகளின் நிலவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
“கோவிட் 19” எனப்படும் கொரோனா தற்போது உலகம் முழுவதும் ஒரு லட்சம் மக்களுக்கு பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3,000 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் நோய் பரவலை இன்னும் கடுப்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இத்தாலியில் கொரோனா தன் கோரத் தாண்டவத்தைத் தற்போது தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் அந்நாட்டில 49 பேர் இறந்துள்ளனர். இதுவரை இத்தாலியின் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 197 ஐ எட்டியிருக்கிறது. மேலும் 4,600 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. இத்தாலி, நோய் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கிறது. மேலும், வெளி அரங்குகளில் விளையாடும் விளையாட்டுகளுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப் பட்டுள்ளது.
ஈரானிலும் கொரோனா அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4,500 ஐ தாண்டி இருக்கிறது.
அமெரிக்காவில் இதுவரை 14 பேர் கொரோனா தாக்கத்தால் உயிர் இழந்து இருக்கின்றனர். அந்நாட்டில் கொரோனா பரவலை முழுவதுமாகத் தடுக்க அதிபர் ட்ரம்ப் 8,300 கோடி டாலர் பணத்தை அவசரகால நிதியாக ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா தொற்று சீனா, தென் கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நான்கு நாடுகளில் தான் தற்போது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த வாரங்களில் கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் தொடங்கி இருப்பதாகச் செய்திகள் பரவின என்பதும் குறிப்பிடத் தக்கது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
சீன அரசு கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளித்த 34 மருத்துவ ஊழியர்களை கௌரவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதில் கொரோனா பாதிப்பை பற்றி ஆரம்பித்தில் எச்சரிக்கை செய்த மருத்துவர் லீயும் ஒருவர். கண் மருத்துவரான லீ வெண்லியாங் சீனாவில் புதிய வைரஸ் பரவுவதைக் குறித்து முதலில் எச்சரிக்கை செய்தார். ஆனால் அந்நாட்டு காவல் துறை வதந்திகளை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், ஜனவரி மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கிய நிலையில் சீன அரசு அவரிடம் மன்னிப்பும் கோரியிருந்தது. இந்நிலையில் மருத்துவர் லீ கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தார். இந்த இறப்பு மக்களிடம் கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது கொரோனா எச்சரிக்கை செய்த மருத்துவர் லீ உட்பட 34 மருத்துவ ஊழியர்களை அந்நாட்டு அரசாங்கம் கௌரவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout