இந்த வாரம் வெள்ளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா?

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் ஷாப்பிங் மால்கள் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகளை மூடவும் படப்பிடிப்பை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்திலும் கேரளா எல்லையில் உள்ள மால்கள் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த வாரம் வெளியாக இருந்த நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா? அல்லது தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

‘பல்லு படாம பார்த்துக்கோ’, ‘மரீஜூனா, ‘காக்டெய்ல்’ மற்றும் ’கன்னி ராசி’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வரும் வெள்ளியன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த நான்கு திரைப்படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

ஏற்கனவே மாநில எல்லையிலுள்ள திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதாலும், சென்னை செங்கல்பட்டு உள்பட ஒருசில இடங்களில் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் ஒரு சில திரையரங்குகள் மூட ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் வரும் வெள்ளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது சந்தேகமே என்று கூறப்படுகிறதே

அது மட்டுமின்றி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்த விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் மற்றும் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ உள்பட ஒரு சில முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

More News

கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

மற்றோர் பேராபத்து!!! 1990 களை விட 6 மடங்கு அதிகமாக உருகும் துருவப் பனிக்கட்டிகள்!!!

உலகம் முழுக்க தற்போது கொரோனா பற்றிய பாதிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

கொரோனா  வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

முதலமைச்சரை உருவாக்குபவன் தான் தலைவன்: பொன்ராஜ்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி வெற்றி பெற்றால், தான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றும்,