கொரோனா வைரஸின் தாக்கத்தை 8 வருடத்துக்கு முன்பே மூடிமறைத்த சீனா!!! தெறிக்கவிடும் தகவல்!!!
- IndiaGlitz, [Tuesday,August 18 2020]
கொரோனா பாதிப்பு கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் மாகாணத்தில் இருந்து முதன்முதலாகப் பாதிப்பை ஏற்படுத்தியது. இத்தகவலை உலக நாடுகளுக்கு முறையாக அறிவிக்க சீனா தவறிவிட்டது. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது நோயைப் பரப்பும் என்ற தகவலை காலம் தாழ்த்தியே வெளியிட்டது என சீனா மீது ஒட்டுமொத்த உலக நாடுகளும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு திகலூட்டும் புதியத் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் வௌவால்களின் கழிவுகளை அகற்றும் வேலையில் 6 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களின் 3 பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்கள் கழிவுகளை அகற்றிவிட்டு வெளியே வந்தபோது உடலில் பல அறிகுறிகள் தென்பட்டதாகவும் அந்த அறிகுறிகள் தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா அறிகுறிகளோடு ஒத்துப்போவதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அப்போது தீவிர சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அந்தச் சிகிச்சைகள் ஏறத்தாழ இப்போது கொரோனாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை போன்று இருந்ததாகவும் அந்த விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கும் உட்படுத்தி இருக்கின்றனர். அந்த உடல்களில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழு கொரோனாவுக்கு ஒத்த மாதிரிகளை கண்டுபிடித்து உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவுக்கு ஒத்த மாதிரிகள் உயிரிழந்த தொழிலாளர்களின் உடலில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் சீனாவில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா தொற்றுக்கான தாக்கம் இருந்தது எனவும் இந்த தாக்கத்தை முதல் நிகழ்வாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கொரோனா நோயின் ஆரம்பக்கட்டம் எது என்பதைக் குறித்து உலகச் சுகாதார மையம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்றின் முதல் தாக்கம் அதுவும் சீனாவின் யுனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா எனும் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையே புரட்டிப் போட்டிருக்கும் நிலையில் அதன் தோற்றம் குறித்த ஆய்வுகளும் விஞ்ஞானிகள் கடும் குழப்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.