கொரோனா கண்காணிப்பில் இருந்த 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,March 14 2020]
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் திடீரென தப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் சுமார் 85 பேர்களுக்கு பரவி இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 5 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற நான்கு பேருக்கு இன்னும் ரத்த மாதிரியின் முடிவுகள் வரவில்லை.
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பேர்களும் மருத்துவமனையில் இருந்து தப்பி, தலைமறைவாகி விட்டதால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் தப்பியோடியவர்களின் முகவரிக்கு காவலர்கள் சென்று அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து மீண்டும் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனை முடிவதற்குள் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த ஐவர் தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.