18 ஆயிரமாக உயர்ந்த கொரோனா நோயாளிகள்: ஊரடங்கையும் மீறி உயரும் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இரண்டாம் கட்டமாக மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கையும் மீறி இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 18,601ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 559லிருந்து 590ஆக உயர்ந்துள்ளது என்பதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842லிருந்து 3,252ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,81,165ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 792,759 பேர்களும், ஸ்பெயினில் 200,210 பேர்களும், இத்தாலியில் 181,228 பேர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370ஆக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு 20,852 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி!

ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் திருச்சி அருகே ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு

கொரோனா விடுமுறையில் அப்பாவின் பிறந்த நாளை கொண்டாடிய 'பாகுபலி' நடிகை

கொரோனா விடுமுறையில் சினிமா நட்சத்திரங்கள் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.

பெண் போலீசாரிடம் ஆபாச பேச்சு: சஸ்பெண்ட் ஆன போலீஸ் எஸ்பி

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க போலீசார் இரவு பகல் பாராமல் கண்காணிப்பு பணியில்

வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்: மனமுடைந்து தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் மிகக்கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'தல' புகழை பாட்டாக பாடிய பிராவோ

Bravo's sings his next song and it's on Dhoni