100ஐ நெருங்கும் ராயபுரம், நெருங்க முடியாத மணலி, அம்பத்தூர்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 105 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி சென்னையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

இதன்படி சென்னை ராயபுரத்தில் 91 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 73 பேர் இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 91 பேர் இந்த பகுதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் ராயபுரத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ராயபுரத்தை அடுத்து திருவிக நகர் பகுதியில் கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தேனாம்பேட்டையில் நேற்று முன்தினம் வரை 19 பேர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளதால் இங்கு மொத்தம் 36 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் 30 பேர்களும், கோடம்பாக்கம் பகுதிகள் 29 பேர்களும் அண்ணா நகர் பகுதிகளில் 26 பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் உள்ள மணலி மற்றும் அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதும் இங்கு உள்ள காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது

More News

கனடாவில் துப்பாகி சூடு நடத்திய மர்ம நபர்: பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் பலி

கனடாவில் போலீஸ் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கொரோனாவுக்கு சென்னை மருத்துவர் பலி: முக ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு பின் செய்ய வேண்டியது என்னென்ன? கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் ஆரம்பித்ததில் இருந்தே அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே

தமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி

அஜித்-பாலா பிரச்சனை: உண்மையில் என்ன தான் நடந்தது?

'நான் கடவுள்' படத்திற்காக இயக்குனர் பாலா தேசிய விருது பெற்றாலும், 'நான் கடவுள்' என்றவுடன் அனைவருக்கும் பாலாவுக்கு அஜித்துக்கும் நடந்த சண்டை தான் ஞாபகம் வரும்.