கொரோனா வைரஸ் தயாரிக்கப்பட்டதல்ல!!! WHO கருத்து!!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், “கொரோனா வைரஸ் ஒரு விலங்கிலிருந்து பரவியதுதான், செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதல்ல” என்று உலகச் சுகாதாரம் மையம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டமைப்பில் கலந்துகொண்ட உலகச் சுகாதாரக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபடெலா சைப் இதைத் தெளிவுபடுத்தினார். அந்தச் செய்திக்குறிப்பில் கொரோனா நாவல் வைரஸ் “விலங்கு வம்சாவளியைச் சேர்ந்தது என்பதற்கான சாத்தியங்கள் மட்டுமே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது ஒரு ஆய்வகத்தில் இருந்து தயாரிக்கப் பட்டதல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டெனால்ட்டு ட்ரம்ப், சீனா தனது வைரஸ் ஆராய்ச்சி திறனை உலகுக்கு காட்டும் நோக்கத்தோடு பல வைரஸ்களை வைத்து ஆய்வு மேற்கொண்டது. அதில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறியிருந்தார். “சீனா வேண்டுமென்றே கொரோனா வைரஸை பரப்பியிருந்தால் விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டிவரும்” எனவம் அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
அதிபரின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள வைராலஜி ஆய்வுக் கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக செய்தி வெளியிட்டது. மேலும், அங்குப் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், அவர் மூலமாக அவரது காதலியும் நோய்த்தொற்றுக்கு ஆளாகினார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட நபரின் காதலி சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சிக் கூடத்திற்கு சென்றபோது மேலும் அங்குள்ளவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியது என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.
இதைத் தவிர நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கொரோனா வைரஸ் வுஹான் நகரத்து ஆய்வகத்தில் இருந்து வெளியானதுதான் என்று கடந்த தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்து இருந்தார். எய்ட்ஸ் வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி சோதனையில் வுஹான் ஆய்வகம் ஈடுபட்டது. இந்த ஆய்வில் புதிய கொரோனா வைரஸ் கசிந்தது என மருத்துவர் லூக் குறிப்பிட்டுயிருந்தார். மேலும், புதிய கொரோனா வைரஸில் எய்ட்ஸ் வைரஸ்க்கான கூறுகள் மற்றும் மலேரியா வைரஸ்க்கான கூறுகள் இருப்பதற்கு சாத்தியம் உண்டு எனவும் தெரிவித்தார்.
இத்தகைய விவகாரங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தின் மூத்த அதிகாரி யுவான் ஜிமிங் நேற்று, சீன ஊடக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் “கொரோனா வைரஸ் வுஹானின் ஆய்வுக்கூடத்தில் இருந்து பரவியது என்று சொல்வதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையிலே தவறானது” என விளக்கம் அளித்திருக்கிறார்.
மேற்கண்ட அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது உலகச் சுகாதார அமைப்பு, “கொரோனா வைரஸ் ஒரு விலங்கிலிருந்து பரவியதுதான், செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதல்ல” என விளக்கம் அளித்திருக்கிறது. உலக நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு அடிப்படையில் சுகாதாரப் பணியாற்றிவரும் WHO, கொரோனா விஷயத்தில் சரியான தகவல்களை உலக நாடுகளுக்கு வழங்கவில்லை. சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என முன்னதாக அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் WHO மறுப்புத் தெரிவித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout