'ரேகை பாக்கலையோ ரேகை': கைரேகை ஜோஸ்யகாரரால் 13 பேர்களுக்கு பரவிய கொரோனா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுவையில் ஒரு கைரேகை ஜோதிடரால் 13 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இது குறித்து புதுவை கவர்னர் கிரண்பேடி அவர்கள் கூறியபோது ’புதுச்சேரியில் வீடு வீடாக சென்று கைரேகை பார்க்கும் ஜோதிடர் ஒருவரால் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளதாகவும் அவர் வழங்கிய பிரச்சாரத்தின் காரணமாகவே கொரோனா பரவியதாகவும் தெரிவித்துள்ளார். 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த கைரேகை ஜோதிடர், முறைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளாமல் அவராகவே வீட்டில் சிகிச்சை எடுத்து கொண்டதால் அவரை சார்ந்தோர்களுக்கும் கொரோனா தொற்று பரவ காரணமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 

புதுவையில் பெரும்பாலும் மதுபான விருந்துகள் நடக்கும் இடம், வீடுகளில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளின் மூலம் தான் கொரோனா அதிகம் பரவுவதாகவும், எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் புதுவை கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.