விலங்குகளுக்கு கொரோனா வைரஸ்!!! இதுவரை சொல்லப்பட்ட ஆய்வு முடிவுகள்???

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

 

அமெரிக்காவின் நியூயார்கள் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையில் நாடியா என்ற புலிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 வயதான இந்த புலிக்குட்டி முதலில், உலர்ந்த இருமலை கொண்டிருந்ததாகவும், தானாகவே குணமடையும் என எதிர்ப்பார்த்த நிலையில் தொடர்ந்து இருமல் அதிகரித்ததாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது கொரோனா அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தினால் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும், மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம், புலி போன்ற 5 விலங்குகள் இதேபோன்ற வறட்டு இருமலைக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிருகக்காட்சி சாலையில் உள்ள பூனைகள் இதுபோன்ற எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை. புலி, சிங்கம் போன்ற பெரிய மிருகங்கள்தான் வறட்டு இருமல் அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. எப்படி இது நிகழ்ந்தது என மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், மார்ச் 16 வரை இந்த மிருகக்காட்சி சாலை பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவியதா அல்லது மிருகங்கள் கொரோனா நோய்த்தொற்றை மனிதர்களுக்கு கடத்துமா என உறுதிப்படுத்தாத நிலையில் செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு அந்நாட்டின் USDA தெரிவித்துள்ளது.

முன்னதாக, சீனாவின் ஹாங்காங் நகரில் கொரோனா அறிகுறிகள் இருப்பதாக பொம்மேரியன் மற்றும் ஷெப்பாட் வகையைச்சேர்ந்த இரு நாய்கள் கடந்த பிப்ரவரியில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. அந்த சோதனையில் அந்நாய்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. நோய்த்தொற்று இருப்பது உறுதியானாலும் அந்நாய்கள் கொரோனா நோயின் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை என அந்நாட்டின் விலங்கு நலவாரியம் உறுதிப்படுத்தியிருந்தது. மேலும், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலும் கொரோனா நோயத்தொற்று மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கோ, அல்லது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கோ பரவ வாயப்பில்லை எனத் தெரிவித்து இருந்தது. பாரிஸின் விலங்குகள் நல ஆரோக்கியத்துக்கான சர்வதேச அமைப்பும் இந்த முடிவினை உறுதிசெய்தது.

முன்னதாக, செல்லப்பிராணிகள் கொரோனா நோய்த்தொற்றை மனிதர்களுக்கு பரப்பாது எனப் பலகட்ட ஆய்வுகள் தெரிவித்தாலும் தற்போது புலிக்குட்டிக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. விலங்குகளுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் வைரஸ் தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் இதுவரை நோயின் கடுமையான பாதிப்பு எதையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

'திருட்டுப்பயலே' இயக்குனரின் மெகா பட்ஜெட் படம் குறித்த தகவல்!

'திருட்டுப் பயலே' மற்றும் 'திருட்டுப் பயலே 2' உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சுசி கணேசன் தற்போது 'திருட்டுப்பயலே 2' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்

கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட பிரிட்டன் பிரதமர்!!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னரே கொரோனா பாதிப்பு இருப்பது

பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே.

முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி