அமேசான் காட்டையும் விட்டு வைக்காத கொரோனா: பழங்குடியின பெண்ணையும் தாக்கியதால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி, இதுவரை உலகம் முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்ததே. இந்த நிலையில் பிரேசில் நாட்டில் மட்டும் சுமார் 7,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அங்கு கொரோனா வைரசால் 255 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரேசில் நாட்டின் தலைநகரில் இருந்து 850 கிலோ மீட்டர் தூரம் உள்ள அமேசான் காட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி விட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவர் ஒருவரிடம் நர்சாக பணிபுரிந்து வருவதாகவும், அந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததால் அந்த வைரஸ் அந்த பெண்ணுக்கு பரவியதாகவும், இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினரை பார்க்க அமேசான் காட்டிற்குச் சென்றபோது அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
மேலும் அமேசான் காட்டில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை என்பதால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நகரத்திற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
ஏற்கனவே அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்து, அழிந்து வரும் இனமாக இருக்கும் நிலையில் தற்போது கொரோனா அவர்களை தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments