வீரருக்கு கொரோனா பாதித்ததை மறைத்த தென்னாப்பிக்கா… இந்திய அணியின் கதி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும் செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இன்று 4 ஆவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தகவல் தற்போது இந்திய அணியினர் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ரத்துச் செய்யப்படும் என்பது போன்ற தகவல் கடந்த மாதம் வெளியானது. ஆனால் தென்னாப்பிக்க கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பிசிசிஐ சில விதிமுறைகளுடன் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டது. இதனால் டி20 கிரிக்கெட் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கடுமையான பயோபபுள் முறையில் தங்கவைக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த விஷயத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறைத்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவருக்கு கொரோனா பாதிப்பு எற்பட்டது. ஆனால் டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்கு முன்புதான் அவருக்கு பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் குணமான பின்னர் அணியில் இணைக்கப்பட்டார் என்று விளக்கம் அளித்திருக்கிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது வீரருக்கு கொரோனா பாதிப்பு எற்பட்ட விஷயத்தை பிசிசிஐயிடம் இருந்து மறைத்தது அம்பலமாகி இருக்கிறது. இதனால் பிசிசிஐ இந்த விஷயத்தில் என்ன முடிவெடுக்கும்? வீரர்களின் பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout