தமிழகத்தில் வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ்: அமைச்சர் அதிர்ச்சித் தகவல்
- IndiaGlitz, [Thursday,June 11 2020]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை தினந்தோறும் மூன்று இலக்கத்தில் இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் புதிய உச்சபட்ச எண்ணிக்கையை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தன்மை மாறி உள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வீரியம் அதிகமாகியுள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீரியம் ஆகியுள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவும் என்ற அச்சம் இருப்பதால் பொதுமக்கள் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.